தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

பல விருதுகளை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணா இயக்கி உள்ள படம் கனகம் காமினி கலஹம். இதில் கிரேஸ் ஆண்டனி மற்றும் வினய் கோட்டை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவின் பாலியின் தயாரிப்பு நிறுவனமான பாலி ஜூனியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியிடப்படுகிறது. இதனை நிவின்பாலி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு பொழுதுபோக்கு படத்தை தர விரும்பினோம். இந்த ஸ்கிரிப்டை ரதீஷ் என்னிடம் சொன்னபோது, இந்த கடினமான கொரோனா நேரத்தில் இந்த படம் பார்வையாளர்களுக்கு ஒரு அழகான, வேடிக்கையான திரைப்படமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். விசித்திரமான கதாபாத்திரங்கள், விசித்திரமான சூழ்நிலைகள் மற்றும் நகைச்சுவையான காட்சிகளை கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் டிரெய்லர் விரைவில் அறிவிக்கப்படும். என்கிறார் நிவின் பாலி.