ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

'நாயகன்' படம் வெளியாகி 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'தக் லைப்'. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களில் ஜோஜு ஜார்ஜ் தவிர மற்றவர்கள் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளவர்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரமே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று(ஜன., 24)தான் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றனர்.
'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குப் பிறகு மீண்டும் மல்டிஸ்டார் படமாக இப்படத்தை இயக்குகிறார் மணிரத்னம். படத்தின் தலைப்பு அறிவிப்பின் போதே வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பான் இந்தியா படமாக இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.