பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் தான் த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ். இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் உருவாகி வரும் பீம்லா நாயக் என்கிற படத்தின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை பவன் கல்யாணுக்காக பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.
தற்போது பவன் கல்யாண் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸுக்கு இன்னொரு கூடுதல் பொறுப்பையும் வழங்கியுள்ளார். தனது சொந்த நிறுவனமான பவன்கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பாக அடுத்ததாக ராம்சரணை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார் பவன்கல்யாண். இந்த படத்திற்கு சரியான இயக்குனர், சரியான கதை என அனைத்தையுமே தேர்ந்தெடுத்து செய்யும் பொறுப்பை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸிடம் ஒப்படைத்துள்ளார் பவன் கல்யாண். அல்லு அர்ஜுனுடனான தனது படத்தை துவங்குவதற்கு முன்பாக இந்த வேலைகளை முடித்துக் கொடுக்க தீவிரமாக இறங்கியுள்ளார் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.