ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு, புகையிலை நிறுவனத்தின் விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். புகையிலையை விளம்பரப்படுத்த தடை உள்ளதால் அந்த புகையிலை நிறுவனத்தின் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில் தான் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதில் மகேஷ்பாபு நடிக்க பலரும் எதிர்த்து வருகிறார்கள்.
சாய்பல்லவி ரூ.2 கோடி கொடுத்தும் முக அழகு கிரீம் விளம்பர படமொன்றில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் கிரீம் போட்டு கருப்பாக உள்ள நிறத்தை சிவப்பாக மாற்ற முடியாது. எனவே இந்த விளம்பர படம் மூலம் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று காரணமும் சொன்னார். அவரே அப்படி இருக்கும்போது மகேஷ்பாபு பெரிய கோடீஸ்வரர். அவரது தந்தை நிறைய படங்களை தயாரித்து இருக்கிறார். பெரிய அளவில் சொத்து இருக்கிறது. இப்படி புகையிலை நிறுவன விளம்பர படத்தில் நடிப்பது சரியா என்று வலைத்தளத்தில் கடுமையான கண்டனங்களை பலரும் பதிவு செய்து வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.