அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவான பிரித்விராஜ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி 200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்கிற பெருமையும் அவருக்கு பெற்று தந்தார். அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குவதற்கு தயாராகி வந்த பிரித்விராஜ் அதற்கு முன்னதாக மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற முழு நீள காமெடி படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த போது முழு திருப்தியடைந்த மோகன்லால் பிரித்விராஜை பாராட்டும் விதமாக அவருக்கு ஒரு கூலிங் கிளாஸ் பரிசளித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார். அதன் தற்போதைய மார்க்கெட் விலை ஒன்றரை லட்சம் ரூபாயாம். மோகன்லாலின் இந்த பரிசை பெருமிதத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரித்விராஜ்.