முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை |
ஆரம்பகாலத்தில் இருந்தே மஞ்சு வாரியரின் தீவிரமான ரசிகராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான் பிரித்விராஜின் ஆசையாக இருந்தது.. ஆனால் பிரித்விராஜ் நடித்த பாவாட என்கிற படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தாலும் அதில் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு சில வினாடிகள் மட்டுமே வந்து செல்வார் மஞ்சு வாரியர். அதேபோல பிரித்விராஜ் இயக்கி நடித்த லூசிபர் படத்தில் மஞ்சு வாரியார் நடித்திருந்தாலும் அதில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் ஒன்று கூட இல்லை.
இந்தநிலையில் முதன்முறையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு காப்பா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. மம்முட்டி நடித்த முன்னறியிப்பு என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் வேணு இந்தப்படத்தை இயக்குகிறார். அந்த முன்னறியிப்பு படத்தில் கூட பிரித்விராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை கேரள திரைப்பட எழுத்தாளர் சங்கம் தயாரிக்கிறது.