7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஏப்ரல் மாதக் கடைசியில் இருந்து தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் எப்போது திறப்பார்கள் என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் தியேட்டர்களைத் திறக்க ஏற்கெனவே அனுமதி அளித்தார்கள். ஆனால், டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்ட சில விவகாரங்களில் அரசின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அதற்கான உத்தரவுகள் வந்துவிட்டதால் இந்த வாரம் ஜுலை 30ம் தேதி முதல் புதிய படங்களை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி வெளியிட உள்ளார்கள்.
மல்டிபிளக்ஸ் அல்லாத சிங்கிள் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் படங்களைத் திரையிட உள்ளார்கள். அதன்படி, இந்த வாரம் “திம்மருசு, இஷ்க் நாட் எ லவ் ஸ்டோரி, நரசிம்மபுரம், த்ரயம், பரிகெட்டு பரிகெட்டு” ஆகிய படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படங்களுக்கு ரசிகர்கள் எப்படி வருகை தருகிறார்கள் என்பதைப் பொறுத்து ஆகஸ்ட் மாதத்தில் சில முக்கிய படங்களை வெளியிட உள்ளார்கள்.
தமிழிலும் தியேட்டர்களில் வெளியிட சில படங்களைத் தயாராக வைத்துள்ளார்கள். அரசு அனுமதி கிடைத்ததும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியீட்டு அறிவிப்புகள் வரலாம்.