ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' | பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் | ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் |

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான கிராக் படம். அதில் ஹீரோவாக நடித்த ரவிதேஜாவுக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே ப்ளாப் படங்களை கொடுத்து பார்ம் இழந்திருந்த ரவிதேஜா இந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கியுள்ளார். அந்தவகையில் அவரது அடுத்த படமாக கில்லாடி என்கிற படம் தயாராகி வருகிறது.
ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே இந்த படம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் டைரக்ஷனில், தான் புதிதாக நடிக்கும் ராமராவ் ஆன் டூட்டி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரவிதேஜா. அதனால் பாதியில் நிற்கும் கில்லாடி படத்தின் மீதி படப்பிடிப்பை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் என்று சொல்லப்படுகிறது.
அதற்கு காரணம் கில்லாடி படத்தின் தயாரிப்பாளர் படத்தின் மீதி படப்பிடிப்பு நடத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்கிற கோபத்தில் தான் ரவிதேஜா புதிய படத்தில் நடிக்க போய்விட்டாராம். ஆனால் கில்லாடி படத்தின் மீதி படப்பிடிப்பை வெளிநாட்டில் படமாக்க வேண்டி இருப்பதால் தற்போது அது சாத்தியமில்லை என்பதாலேயே அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.
தற்போது ரவிதேஜாவின் கோபத்தை அறிந்த தயாரிப்பாளர் ஆந்திராவிலேயே மிகப்பெரிய செட் போட்டு, மீதி காட்சிகளை படமாக்கும் ஏற்பாடுகளில் இறங்கி விட்டாராம். அதுமட்டுமல்ல ரவிதேஜாவை சமாதானப்படுத்தும் விதமாக கில்லாடி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை-26ஆம் தேதி துவங்குகிறது என்று ஒரு போஸ்டரை சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர். சொன்னபடி நேற்று படப்பிடிப்பையும் துவங்கி விட்டார்..