மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

பைவ் ஸ்டார் என்கிற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை கனிகா. ஆனால் சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்த பிறகு தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. அதே சமயம் மலையாளத்திலும் நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன கனிகா, மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து கடந்த ஐந்து வருடங்களாக பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி உள்ளிட்ட சீனியர் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம் பெற்று வருகிறார் கனிகா. கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளியான மம்முட்டி நடித்த மாமாங்கம் என்கிற வரலாற்றுப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கனிகா.
அதைத் தொடர்ந்து தற்போது சுரேஷ் கோபி நடித்து வரும் பாப்பன் என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதேபோல தற்போது பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடித்து வரும் ப்ரோ டாடி என்கிற படத்திலும் கனிகா இணைந்துள்ளார். அந்தவகையில் கனிகா, சீனியர் நடிகர்களின் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.