கலைஞராக இருப்பதே மகிழ்ச்சியை தருகிறது: ஸ்ருதிஹாசன் | இரு வாரங்களில் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: கவுதம் மேனன் நம்பிக்கை | திருமணம் எப்போது? வெட்கப்பட்டு நழுவிய சாய் தன்ஷிகா | என் மகன் வேத் நடிக்க வருவான்: ரஜினி மகள் சவுந்தர்யா | ஆதரவற்றோர் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்று உணவளித்து பாட்டு பாடி மகிழ்வித்த வினித் சீனிவாசன் | 'இருமுடி' படத்தில் ரவி தேஜாவின் ஐயப்ப பக்தர் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் புதிய தகவல் | விமான நிலையத்தில் போட்டோகிராபரை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா மந்தனா | 'பூத் போலீஸ் 2' படத்தை இயக்கும் பிரியதர்ஷன் | சிரஞ்சீவி படத்தில் இணையும் அனுராக் காஷ்யப் | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ ஜெகன்னாதனின் “படகோட்டி” பட அனுபவங்கள் |

பொதுவாகவே பிரபல ஹீரோக்களின் பிறந்த நாட்களில் அவர்களது படங்கள் குறித்த டீசர், டிரைலர் அல்லது புதிய பட அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். நேற்று துல்கர் சல்மானின் பிறந்தநாளும் இதே ரீதியில் சில புதிய அறிவிப்புகளோடு அமர்க்களமாக முடிந்திருக்கிறது. குறிப்பாக தனது அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை தனது இரண்டு நண்பர்களுக்கே கொடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் துல்கர் சல்மான்.
அதில் ஒருவர் மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான சௌபின் சாஹிர். பிரேமம் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான இவர், துல்கருடன் தொடர்ந்து இதுவரை 6 படங்களில் நண்பராக நடித்தவர்.. அதனாலாயே, இவரை 'பறவ' படம் மூலம் இயக்குனராக்கி, தானே படத்தை தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார் துல்கர் சல்மான். இப்போது இரண்டாவது முறையாக படம் இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்துள்ளார். படத்தின் பெயர் 'ஓதிரம் கடகம்' இதுவரை தான் நடித்திராத கதாபாத்திரமும் கதையும் என்பதால் உடனே ஒப்புக்கொண்டாராம் துல்கர்.
அடுத்ததாக 'கிங் ஆப் கொத்த'. மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனரான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷியை இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் துல்கர். இயக்குனர் ஜோஷி துல்கரின் தந்தையான மம்முட்டியை வைத்து சுமார் 50 படங்கள் வரை இயக்கியவர். அந்தவகையில் சிறுவயது முதலே நண்பனாக பழகிய அவரது மகனை இப்போது இயக்குனராக்கியுள்ளார் துல்கர் சல்மான்.