திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் |
பச்சை என்கிற காத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா சசி. பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சரண்யா சசிக்கு திடீரென கடும் தலைவலி ஏற்பட்டது. அது அடிக்கடி ஏற்படவே மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக அதோடு அவர் போராடி வருகிறார். இதுவரை அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அவரின் கையில் இருந்த பணமெல்லாம் மருத்துவத்துக்கே செலவான நிலையில் நண்பர்களும், மலையாள சின்னத்திரை மற்றும் சினிமா உலகமும் அவருக்கு உதவி வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சரண்யாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் தோழியான நடிகை சீமா நாயர் தெரிவித்துள்ளார். மேலும் சரண்யாவுக்காக பிரார்த்தனை செய்யுமாறு சீமா, ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். மலையாள ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.