அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கேரளா அருகே அரபிக் கடலில் இருக்கிறது லட்சத் தீவுகள். இங்கு பல ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவு மக்கள் மீது மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மலையாள நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா "மத்திய அரசு, லட்சத் தீவு மக்கள் மீது பயோ வார் நடத்துவதாகவும், கொரோனாவை பரப்புவதாகவும்" குற்றம் சாட்டினார். இதனால் இவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயிஷாவுக்கு கேரள உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆயிஷா சுல்தானா, ‛‛லட்சதீவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், நான் தெரிவித்த கருத்தை தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வைத்தும் ஒரு சினிமா இயக்கப் போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.