'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கேரள மாநிலம் அருகே உள்ளது லட்சத்தீவு. இதன் நிர்வாக அதிகாரியாக குஜராத்தை சேர்ந்த பிரபுல் படேல் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தீவின் வளர்ச்சி என்ற பெயரில் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அந்த தீவு மக்கள் மற்றும் கேரள மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சேவ்லக்ஷத்தீவ் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிரபுல் படேல் நடவடிக்கைகளுக்கு எதிரா குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மலையாள நடிகர், நடிகைகள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகை கீத்து மோகன்தாஸ் கூறியிருப்பதாவது: லட்சத் தீவில் அமைதியில்லை. வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் வாழ்க்கையை சிதைக்காதீர்கள். பள்ளிகளில் அசைவ உணவு தடை செய்யப்பட்டிருக்கிறது அதிகமான மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உங்களை கெஞ்சுகிறேன். லட்சத்தீவு மக்களை விட்டு விடுங்கள்.
இதே போன்று நடிகை நிகிலாவிமல் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவில் நடக்கும் கொடுமைகளை இங்கிருந்து கொண்டு காண சகிக்கவில்லை. உலகில் அழகான வாழ்க்கை வாழும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி நடக்கிறது. இதற்கு முன் நிர்வகித்தவர்கள் தீவின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். புதிய நிர்வாகிகள் தீவின் மக்களுக்கு எதிராக இருக்கிறார்கள். மக்களின் வாழ்க்கை, உணவு பழக்கத்தை மாற்ற நினைக்கும் போக்கை தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறர்.
நடிகர் பிருத்விராஜ், நடிகை தன்யா ரவி உள்பட பலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். கேரள மாநில அரசும் லக்ஷத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்ப பெற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.