ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்றது. மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியினை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 3வது சீசன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்த நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக 95வது நாளில் நிறுத்தப்பட்டது. இதனால் டைட்டில் வின்னரை பார்வையாளர்களின் ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த நிலையில் மலையாள பிக் பாஸ் 4வது சீசனுக்கு பங்கேற்பாளர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களை பற்றிய தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்கள் வெளியானது.
இது மோசடியானது என்றும், உண்மை என்று நம்பி யாரும் தங்களுடைய விவரங்களை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தேர்வை இதுவரை நடத்தவில்லை என்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். அதோடு இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.