பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ், சேனல் ஒன்றின் நிருபராக பணியாற்றிய சுப்ரியா மேனன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2014ல் இவர்களுக்கு அலங்ரிதா என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஏழு வயதாகும் இந்த குழந்தை, தனது தந்தை ஒரு நடிகர் மட்டுமல்ல இயக்குனர் என்பதையும் கூட நன்றாக புரிந்து வைத்திருக்கிறதாம்.
அந்த வகையில் சமீபத்தில் தனது குழந்தை எழுதிய பத்து வரி சிறுகதை ஒன்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பிரித்விராஜ், சமீபத்தில் தான் கேட்ட கதைகளிலேயே, மிகச்சிறந்த கதை இதுதான் என்றும், இந்த படத்தை திரைப்படமாக இயக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அப்படி அந்த குழந்தை எழுதியுள்ள கதை இதுதான்.
அமெரிக்காவில் ஒரு அப்பாவும் மகனும் வசிக்கின்றனர். இரண்டாம் உலகப்போர் அங்கு நடந்தபோது, அவர்கள் அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு இடம் பெயர்கின்றனர். இரண்டு வருடங்கள் அங்கேயே வசிக்கின்றனர். போர் முடிந்தபிறகு, அவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி, சந்தோசமாக வாழ ஆரம்பிக்கின்றனர் என்று, அந்த குழந்தை தனக்கு தோன்றிய ஒரு சிறுகதையை எழுதியுள்ளது. ஏற்கனவே லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறிய பிரித்விராஜ், தனது மகள் சொன்ன கதையிலும் சினிமாவுக்கான அம்சங்கள் உள்ளன என்று கூறியுள்ளதுடன், இந்த கொரோனா தாக்கம் முடிவடைந்த பின்பு இந்த கதையை படமாக்கும் முயற்சியில் இறங்குவேன் என்றும் கூறியுள்ளார்