பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

அறுபது வயதானாலும் கூட, இன்னும் பவர்புல் ஹீரோவாகவே நடித்து இளம் நடிகர்களுக்கு சவால் விட்டு வருபவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. பார்ப்பதற்கு முரட்டு தோற்றத்தில் காணப்பட்டாலும், சக நடிகர்களிடம் எப்போதும் அன்பு கொண்ட பாலகிருஷ்ணா, அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருபவர். அந்த வகையில் தற்போது போயப்பட்டி சீனு இயக்கத்தில் தற்போது அகண்டா என்கிற படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.
ஏற்கனவே ஶ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தவர் தான் ஸ்ரீகாந்த். பெரும்பாலும் கதாநாயகனாக நடித்து வரும் ஸ்ரீகாந்த் தற்போது தனது படத்தில் வில்லனாக நடிப்பதில் பாலகிருஷ்ணாவுக்கு பெரிய அளவில் சந்தோஷம் இல்லை. காரணம் ஸ்ரீகாந்தை கதாநாயகனாகவே தொடர்ந்து நடிக்கும்படியும் நல்ல கதைகளையும் படங்களையும் தேர்வு செய்து நடிக்கும்படியும் வில்லனாக நடிக்க கூடாது என்றும் அறிவுரை கூறியவர் தான் பாலகிருஷ்ணா.
ஆனால் தற்போது அவர் சொன்னதையும் மீறி அவருக்கு வில்லனாக நடிக்கும் சூழல் ஸ்ரீகாந்துக்கு ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் அவரது நடிப்பில் எந்த குறையும் சொல்லாத பாலகிருஷ்ணா, இனி மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டாம் என்றும் கதாநாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் கூறி, சில இயக்குனர்களையும் அவருக்கு சிபாரிசு செய்துள்ளாராம்.




