'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கில் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் கூட்டணியில் தற்போது தயாராகி வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தல் பின்னணியில் உருவாக்கி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்றாலும், இந்த படத்தின் சிறப்பு பாடல் ஒன்றுக்காக நடிகை திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன், திஷா பதானி இருவரும் இணைந்து நடனமாடும் இந்தப் பாடலுக்காக, சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஹிட் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து இந்த படத்தில் இணைக்க உள்ளார்களாம். அதற்கான வேலைகளில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் மும்முரமாக இருக்கிறாராம். சிரஞ்சீவியின் எந்த பாடலை ரீமிக்ஸ் செய்யப்போகிறோம் என்பது குறித்து ஒரு சிறிய தகவல் கூட கசிய விடாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் புஷ்பா படக்குழுவினர்.