ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
மலையாள சினிமாவின் முக்கியமான கதாசிரியர் டென்னிஸ் ஜோசப். நாயர்ஸாப், நியூடெல்லி, கோட்டையம் குஞ்சச்சன், மெட்ராஸ் மெயில், சங்கம் உள்பட 40க்கும் மேற்பட்ட மலையாள படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
அகராஜன், தொடர் கதா, அப்பு, அதர்வம், மனு அங்கிள் படங்களை இயக்கினார். இதில் அதர்வம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவை மலையாள சினிமாவில் அறிமுகப்படுத்தினார். மனு அங்கிள் படத்திற்காக சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருது பெற்றார்.
63 வயதான டென்னிஸ் ஜோசப் உடல்நலக் குறைவு காரணமாக கோட்டையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
டென்னிஸ் ஜோசப் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: டென்னிஸ் ஜோசப் பிரபலமான படங்களை உருவாக்கியவர். பார்வையாளர்களின் மனதில் இன்னும் நீடிக்கும் பல வெற்றி திரைப்படங்களின் ஆசிரியர் இவர். அவர் எழுத்தில் ஒரு அற்புதமான மனிதர். என்று கூறியுள்ளார்.