சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் படத்தை இயக்கிய ராஜீவ் ரவி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு, தற்போது நிவின்பாலி நடிக்கும் 'துறமுகம்' (துறைமுகம்) என்கிற படத்தை இயக்கி வருகிறார். பொதுவாக ராஜீவ் ரவியின் படங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை சொல்லும் விதமாக அமைந்திருக்கும்.. அந்தவிதமாக துறைமுகம் பகுதியையும் துறைமுக அதிகாரிகள். மற்றும் தொழிலாளர்கள். அந்தப்பகுதியை சார்ந்த மக்கள் ஆகியோரை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது.
1940களில் நடைபெறும் கதையாக, தொழிலார்களின் வாழ்வாதார போராட்டங்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிறது. அதனால் இன்று தொழிலாளர்களை போற்றும் மே தினம் என்பதால், துறமுகம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தில் நடிகர் இந்திரஜித் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா இந்திரஜித் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.