நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
மலையாளத்தில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராக கோலோச்சி வரும் மோகன்லால், தற்போது 'பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' (Barroz Guardian Of D Gamas Treasure) என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப்படம் 3டியில் உருவாக இருக்கிறது.. இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிசாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதுகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் துவங்குவதாக இருந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்தப்படத்தில் ஸ்பானிஷ் நடிகர்களான ரபேல் அமர்கோ (Rafael Amargo) மற்றும் பாஸ் வேகா (Paz Vega) ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்பதால் இந்த சூழலில் அவர்களையும் ஒருங்கிணைத்து படப்பிடிப்பை துவக்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள மோகன்லால், வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் வேலைகள் துவங்கும் என கூறியுள்ளார்.