''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
1992ல் கேரளவையையே உலுக்கிய கொலை வழக்கு தான் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கு.. 28 வருடங்கள் கழிந்த நிலையில், இவரை கொலை செய்த குற்றத்துக்காக பாதிரியார் ஒருவரும் கன்னியாஸ்திரி ஒருவரும் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டாலும் இந்த கொலை நிகழ்வை நேரில் பார்த்த முக்கிய சாட்சியான திருடன் ஒருவனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கையும் அந்த நல்ல திருடனையும் மையப்படுத்தி சோரன் என்கிற படம் உருவாகியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சமீபத்தில் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இந்தப்படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்பது தான். இந்தப்படம் இரவில் நடக்கும் கதை என்பதால் மொத்தப்படத்தையும் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் செயின்ட் அந்திக்காடு. அந்தவகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் இரவு நேரங்களில் மட்டுமே படமாக்கப்பட்ட முதல் படம் என்கிற பெருமை எங்களுக்கு கிடைத்துள்ளது என்கிறார் மகிழ்ச்சியுடன்.