காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை கடந்த அக்டோபர் மாதமே திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு தளர்வு அறிவித்தது. ஆனால் கேரளாவிலோ கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களை திறக்க தடை விதித்திருந்தது அந்த மாநில அரசு. இந்தநிலையில் ஜன-5 முதல் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகளை திறந்துகொள்ள கேரள அரசு விதிமுறைகளுடன் தளர்வுகளை அறிவித்தது. இந்தநிலையில் தற்போது எதிர்பாராத புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதால் இன்னும் கேரளாவில் திரையரங்குகளை திறப்பதில் இழுபறி நீடிக்கிறது.
அதாவது கேரளா பிலிம் சேம்பர், அரசு விதித்துள்ள அதிகப்படியான வரிச்சுமையை விலக்குவதோடு மற்றும், ஊரடங்கு காலகட்டத்திற்கான மின் கட்டணத்தில் சலுகையும் அளிக்கவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது. அதேபோல இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை திருப்பி செட்டில் செய்தால் மட்டுமே புதுப்படங்களை ரிலீஸ் செய்வோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த எதிர்பாராத புதிய சிக்கலை தீர்த்து வைக்கும் முயற்சியில் தற்போது கேரள பிலிம் எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவராக இருக்கும் நடிகர் திலீப் இறங்கியிருக்கிறாராம்.