'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
மலையாள சினிமாவின் நடிகரும், கதாசிரியருமான சங்கர் ராமகிருஷ்ணன், தற்போது பதினெட்டாம்படி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க கூடிய இந்த படத்தில் மம்முட்டி, சற்றே நீட்டிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மம்முட்டி தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் இதேப்போல கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளனராம். மம்முட்டி இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் கலந்து கொண்டு நடித்து வருகிறார். போனிடைல் ஹேர்ஸ்டைலுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திறங்கிய மம்முட்டியின் கெட்டப்பை பார்த்து படக்குழுவினரும், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்களும் ஆச்சரியப்பட்டு போனார்களாம்.