ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி நீளமாக இருப்பது நாம் பல படங்களில் பார்த்தது தான். ஆனால் அந்த க்ளைமாக்ஸ் காட்சி முழுதும் சண்டைக்காட்சியாகவும், அதிலும் கால் மணி நேரத்துக்கும் அதிகமான நீளம் கொண்டதாகவும் அமைவது ரொம்பவே அரிதான விஷயம். மோகன்லால் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான புலி முருகன் படத்தில் கடைசி இருபது நிமிட காட்சியும் அதிரடி சண்டைக்காட்சியாகவே அமைந்திருந்தது.
அந்தவகையில் தற்போது மோகன்லால் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஒடியன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் 15 நிமிடம் வரை நீடிக்கும் மிகப்பெரிய ஆக்சன் பிளாக் ஆக படமாக்கப்பட்டுள்ளதாம். இது திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை.. கதைப்படியே இருந்தது என்கிறார் படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன். படத்தின் ஜீவநாடியான இந்த க்ளைமாக்ஸ் காட்சியை 'புலி முருகன்' படத்தை போலவே வெகு பிரமிப்பாக வடிவமைத்திருக்கிறாராம் ஆக்சன் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்..