விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தெலுங்குத் திரையுலகத்தில் 'அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்' ஆகிய படங்களின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து விஜய் தேவரகொன்டா முன்னணி ஹீரோக்களின் வரிசைக்கு முன்னேறினார். ஆனால், அவர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'நோட்டா' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தமிழிலாவது சில நாட்கள் ஒடியது. ஆனால், தெலுங்கில் படுதோல்வி அடைந்தது.
அந்தப்படத்தில் விஜய் நடித்ததை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். அதனால், விஜய் தேவரகொன்டா நடித்த அடுத்த படமான 'டாக்சிவாலா' படம் மீது ஒரு சந்தேகம் எழுந்தது. அப்படம் வெற்றி பெற்றால் தான் விஜய் மார்க்கெட் தெலுங்குத் திரையுலகத்தில் நிலைக்கும் என்றெல்லாம் பேச்சுகளும், விமர்சனங்களும் அதிகமாகவே வந்தன.
எல்லோரது விமர்சனங்களையும் மீறி அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபம் நிச்சயம் என்கிறார்கள்.