ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்த 'பயோபிக்' படமாக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம் 'என்டிஆர்'. கிரிஷ் இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் பாலகிருஷ்ணா, வித்யா பாலன், ராணா டகுபட்டி, சுமந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
கடந்த வாரம் இப்படத்தில் என்டிஆர் மருமகனாக சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கும் ராணா டகுபட்டியின் போஸ்டர் வெளியிடப்பட்டது. பார்ப்பதற்கு அப்படியே சந்திரபாபு நாயுடுவின் இளமைத் தோற்றத்தில் இருந்த ராணாவின் போஸ்டர் ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் பாராட்டைப் பெற்றது.
இன்று தெலுங்குத் திரையுலகத்தின் மற்றொரு முக்கியமான பெருமைக்குரிய நடிகரான மறைந்த நாகேஸ்வர ராவ் போஸ்டரை 'என்டிஆர்' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தெலுங்குத் திரையுலகத்தின் கருப்பு வெள்ளை காலத்தில் என்டிஆர், எஎன்ஆர் ஆகியோர் பல சரித்திர சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். எஎன்ஆர் கதாபாத்திரமும் என்டிஆர் படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்தக் கதாபாத்திரத்தில் எஎன்ஆர் பேரன் சுமந்த் நடிக்கிறார். எஎன்ஆர் கதாபாத்திரத்தில் சுமந்தின் பொருத்தமான தோற்றம் கொண்ட போஸ்டரையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.