ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
பிரபல ஹிந்தி நடிகையான ஸ்ரத்தா கபூர், பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். சுஜீத் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
இப்படம் துவங்கியதில் இருந்தே தெலுங்கு பேச பயிற்சி எடுத்து வந்த ஸ்ரத்தா கபூர், படப்பிடிப்பு தளங்களில் உள்ளவர்களிடம் தனக்குத் தெரிந்த தெலுங்கில் பேசி பயிற்சி எடுத்தார்.
இந்நிலையில், தற்போது சாஹோ படத்தில், தானே சொந்தக்குரலில் தெலுங்கில் டப்பிங் பேச வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த ஆர்வத்தை படக்குழு பாராட்டியபோதும் இன்னும் அவரை பேச வைப்பது குறித்து முடிவெடுக்கவில்லையாம்.