மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
தெலுங்குத் திரையுலகத்தில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படத்திற்குப் பிறகு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'என்டிஆர்' உள்ளது. இந்தப் படத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா, என்டிஆர் ஆகவும், ஹிந்தி நடிகை வித்யா பாலன் என்டிஆர் மனைவி பசவதாரம்மா ஆகவும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. அதன் பின் ஷ்ரத்தா கபூர், சோனாக்ஷி சின்ஹா ஆகியோரில் ஒருவர் ஸ்ரீதேவியாக நடிப்பார் என்று பேச்சு வந்தது. இதை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் தான் நடிக்க உள்ளார். அதற்காக அவர் முன்பணத்தையும் வாங்கிவிட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் போது அவர் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
என்டிஆர் - ஸ்ரீதேவி இணைந்து 14 தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்கள். அதில் பல படங்கள் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.