ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் பிருத்விராஜ் முதன்முதலாக லூசிபர் என்கிற படத்தை இயக்குவதன் மூலம் டைரக்சனில் அடியெடுத்து வைக்கிறார். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் வலுவான ஸ்டைலிஷான, அதேசமயம் மலையாள திரையுலகிற்கு புதிதாக ஒரு நபரை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ள பிருத்விராஜ், அதற்காக விவேக் ஓபராயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் 16 ஆண்டுகளுக்கு முன் விவேக் ஓபராய் பாலிவுட்டில் ராம்கோபால் வர்மா டைரக்சனில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான 'கம்பெனி' படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடித்திருந்தார்..
மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும், அதுவும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்றும் கடந்த வருடம் தான் தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார் விவேக் ஓபராய். இப்போது அந்த ஆசை பிருத்விராஜின் மூலம் நிறைவேற போகிறது.