ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடித்தது சில படங்களே என்றாலும் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் நஸ்ரியா. நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு, திருமணத்திற்குப்பின் நடிப்பை விட்டு முழுவதுமாக ஒதுங்கிவிட்டார். இந்தநிலையில் தான் தனக்கு பெயர் வாங்கித் தந்த பெங்களூர் டேய்ஸ் பட இயக்குனர் அஞ்சலி மேனனின் கூடே என்கிற படத்தின் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்..
நேற்று இந்தப்படத்தின் டைட்ட்டில் போஸ்டரை நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டு நஸ்ரியாவின் தியாகத்தை புகழ்ந்திருந்தார்.
"இதுவரை நான் எந்தப்படத்தின் போஸ்டரையும் எனது முகநூலில் பகிர்ந்ததில்லை. நான்கு பொன்னான வருடங்களை எனக்காக, குடும்பத்துக்காக தியாகம் செய்துள்ளார் நஸ்ரியா. நான்கு வருடங்களுக்கு பின் என் உயிரை (நஸ்ரியாவை) திரையில் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. ஐ லவ் யூ நஸ்ரியா.. " என பதிவிட்டுள்ளார் பஹத் பாசில்.