ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள திரையுலகில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகராக இருப்பவர் அஜய்குமார் என்கிற கின்னஸ் பக்ரு. தமிழில் டிஷ்யூம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து காமெடியில் கலக்கிய இவர், காவலன், அற்புத தீவு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் குட்டியும் கோலும் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார்.
ஏற்கனவே அற்புத தீவு படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் உயரம் குறைந்த நடிகர் என கின்னஸ் சாதனை படைத்து, அப்போதிருந்து கின்னஸ் பக்ரு என அழைக்கப்பட்டு வருகிறார். இந்தநிலையில் இவர் இயக்கிய குட்டியும் கோலும் படம் மூலம் மிகவும் உயரம் குறைந்த இயக்குனர் என்கிற கின்னஸ் விருதையும் தற்போது பெற்றுள்ளார் கின்னஸ் பக்ரு.