விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பிரபல இயக்குனர் சத்யன் அந்திகாடு டைரக்சனில் நடிகர் பஹத் பாசில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது அல்லவா..? இந்தப்படத்திற்கு மிகவும் கேட்சியான டைட்டில் வைக்க வேண்டும் என நினைத்து 'மலையாளி' என டைட்டிலை வைக்க படக்குழுவினர் அனைவருக்கும் ஒரே சந்தோசம்..
ஆனால் இதே டைட்டிலை வேறொருவர் பதிந்து வைத்திருப்பதாகவும், தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருவதாகவும் இயக்குனருக்கு தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அந்த படக்குழுவில் இருந்து இயக்குனர் சத்யன் அந்திக்காடுவுக்கு இது ஒரு புகாராக அல்லாமல், தகவலாக தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வேறு பொருத்தமான தலைப்பை தேட ஆரம்பித்துள்ளார் சத்யன் அந்திக்காடு. இதற்கு முன் பஹத் பாசிலை வைத்து இவர் இயக்கிய படத்திற்கு 'ஒரு இந்தியன்' பிரணய கதா' என டைட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.