ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மம்முட்டி நீண்ட நாளைக்கு பிறகு தெலுங்கில் நடிப்பதும், அதுவும் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் 'யாத்ரா' என்கிற படத்தில் நடிக்கிறார் என்பதுதான் டோலிவுட்டின் ஹாட் டாபிக்.. இந்தப்படத்தை மஹி ராகவ் என்கிற தெலுங்கு இயக்குனர் இயக்குகிறார்.
இந்தப்படத்திற்காக மம்முட்டியிடம் கதை சொல்ல சென்ற மஹி ராகவ், தனக்கு மலையாளம் தெரியாது என்பதால் படத்தின் கதையை பக்காவாக ஆங்கிலத்தில் எடுத்து கொண்டு தயாராக சென்றாராம். ஆனால் கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே அவரை கையமர்த்திய மம்முட்டி, அவரை தெலுங்கிலேயே கதை சொல்ல சொன்னாராம். மம்முட்டிக்கு தெலுங்கு நன்றாக புரியும் என அப்போதுதான் இயக்குனருக்கே தெரிய வந்ததாம்.