ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல மலையாள குணசித்ர நடிகர் சீனிவாசன். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் வடக்கு நோக்கி எந்திரம், சித்தவிஸ்தயா சியாமளா, பட்டண பிரவேசம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். இதில் சித்தவிஸ்தயா சியமாள, தேசிய விருது பெற்றது. 7 முறை சிறந்த நடிகருக்கான மாநில விருது பெற்றவர். 61 வயதாகும் சீனிவாசன் கொச்சியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சீனிவாசன் குணமடைந்து வருகிறார். ஒரு முறை மாரடைப்பாலும் பாதிக்கப்பட்டார் சீனிவாசன். சர்க்கரை வியாதியும் அவரை தாக்கி உள்ளது. அதனால் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சீனிவாசனின் இரு மகன்களில் வினித் சீனிவாசன் இயக்குனராகவும், தியான் சீனிவாசன் நடிகராகவும் உள்ளனர்.