ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் 'முதுகாவ்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்தப்படம் அவரை பிரபலப்படுத்தவில்லை. சமீபத்தில் வெளியான மம்முட்டி நடித்த 'மாஸ்டர் பீஸ்' படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார். நடிப்பிற்கு பாராட்டு கிடைத்தாலும் பெரிய முன்னேற்றம் ஒன்றும் இல்லை.
தற்போது 'பகாமதி' ஹீரோ உன்னி முகுந்தனுடன் இணைந்து 'இறா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் கோகுல் சுரேஷ். இப்படியே விட்டால் தனது மகனின் சினிமா பயணத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என நினைத்த சுரேஷ்கோபி, தான் நடிக்கவுள்ள 'லேலம்-2' படத்தில் உள்ள முக்கிய கேரக்டரில் தனது மகனையும் தன்னுடன் சேர்ந்து நடிக்க வைக்கிறாராம்.
1997ல் சுரேஷ்கோபி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஆக்ஷன் படமான 'லேலம்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் உருவாகிறது. மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான ரெஞ்சி பணிக்கர் இதன் கதையை எழுத, அவரது மகனும் மம்முட்டியின் 'கசபா' பட இயக்குனருமான நிதின் ரெஞ்சி பணிக்கர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.