ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த 2014ல் மலையாளத்தில் இயக்குனர் வேணு இயக்கத்தில் வெளியான 'முன்னறியிப்பு' படத்தில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியாக, மிகவும் மாறுபட்ட நடிப்பால் மிரட்டியிருந்தார் மம்முட்டி. ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப்படத்தை அடுத்து சுமார் நான்கு வருட இடைவெளிவிட்டு தற்போது 'கார்பன்' என்கிற படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர் வேணு.
அதனாலேயே இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார்.. இந்தப்படத்திற்கு தணிக்கை குழுவினர் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், வரும் ஜன-19ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.