ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை பார்வதி நாயருக்கு ஆண்டிற்கு மூன்று படங்களுக்கு மேல் தாண்டவில்லை என்றாலும் கூட முக்கியமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவரத்தான் செய்கிறது. அந்தவகையில் தற்போது பாலிவுட்டை சேர்ந்த ஜி.வர்மா என்பவர் இயக்கத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பார்வதி நாயர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் பார்வதி, இதில் ஒப்பந்தமானது கூட திடீரென்று தான். இந்தப்படத்தை தயாரிக்கும் சந்தோஷ் டி.குருவில்லா என்பவர் தான் பார்வதி நாயர் கதாநாயகியாக நிமிர் படத்தையும் தயாரித்துள்ளார்.
அதன்மூலம் தான் இவருக்கு மோகன்லால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனாலும் மோகன்லாலின் மனைவியாக முக்கிய வேடத்தில் நடிக்க இன்னொரு கதாநாயகியை தேடி வருகிறார்கள்.