சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
நடிகர் துல்கர் சல்மானுக்கு இந்த வருடம் நான்கு படங்கள் ரிலீஸாகின. இவற்றில் சோலோ படம் மட்டும் மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக வெளியானது. ஆனால் அதிலும் ஒரு பரிதாபம் என்னவென்றால் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் காரணமாக, ரிலீசான ஒரே நாள் மட்டுமே தியேட்டர்களில் ஓடியது. அதேசமயம் மலையாளத்திலும் இந்தப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த வருட ஆரம்பத்தில் ஜாலியான குடும்பப்படமாக நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படமும் ரொம்பவே எதிர்பார்த்தது. அமல் நீரத் இயக்கத்தில் நடித்த 'காம்ரேட் இன் அமெரிக்கா' படமும் கூட துல்கருக்கு திருப்தி தந்ததே தவிர ரசிகர்களுக்கு மனநிறைவை தரவில்லை.
இந்த சூழலில் ஒரு ஆறுதலாக துல்கர் கிட்டத்தட்ட கொஞ்சம் அதிக நேரம் வரும்படியான கெஸ்ட் ரோலில் நடித்திருந்த 'பறவ' படம் சமீபத்தில் தான் நூறு நாட்களை கடந்தது. தற்போது தமிழ், தெலுங்கில் உருவாக்கி வரும் மகாநதி, தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இந்தியில் 'கர்வான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆக இந்த 2017 துல்கருக்கு பெரிய ஏற்ற இறக்கமின்றி கடந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.