மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் ராஜீவ் ரவியின் படங்கள் எல்லாமே மாற்று சினிமாவை ரசிக்கும் ரசிகர்களின் ரசனைக்கு செமத்தியான தீனி தருபவை.. கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் ராஜீவ் ரவி டைரக்சனில் 'கம்மட்டி பாடம்' என்கிற பாடம் வெளியானது.. ஒரு கேங்க்ஸ்டர் பாணி படமாக உருவாகி இருந்த இந்தப்படம் விமர்சனம் ரீதியாக பராட்டப்பட்டதுடன் பலதரப்பட்ட விருதுகளையும் வாரி குவித்தது.
டைரக்சனுக்கு சிறிய இடைவெளிவிட்டுள்ள ராஜீவ் ரவி, தற்போது, தனது மனைவி கீது மோகன்தாஸ், நிவின்பாலியை வைத்து இயக்கிவரும் 'மூத்தோன்' படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இதை முடித்ததும் அடுத்தாக டைரக்சன் தொப்பியை அணிய இருக்கிறார். ஏற்கனவே பஹத்பாசில், அவரது தம்பி பர்ஹான் பாசில், துல்கர் சல்மான் என இளம் நடிகர்களை வைத்து படம் இயக்கிவிட்ட ராஜீவ் ரவி அடுத்ததாக இயக்கப்போவது நிவின்பாலி நடிக்கும் படத்தைத்தான்..
'மூத்தோன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் நிவின்பாலியுடன் இணைந்து பணியாற்றிய சமயத்தில் தான் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கான கதையை நிவின்பாலியிடம் கூறியுள்ளார் ராஜீவ் ரவி. அந்தக்கதை நிவின்பாலிக்கு பிடித்துபோகவே நிவின்பாலியின் பிறந்தநாளான நேற்று இந்தப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார்கள்.