'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
கடந்த வருடம் மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் வெளியாகி, சூப்பர்ஹிட்டானதுடன் மலையாள சினிமாவின் வியாபார எல்லையை பலமடங்கு விரிவுபடுத்தியது. கடந்த அக்-7ஆம் தேதி வெளியான படத்தின் ஒரு வருட நிறைவு கொண்டாட்டம் மோகன்லால் ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப்படம் மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.
மேலும் மோகன்லால் படத்திற்கு சின்னக் குழந்தைகள் எல்லாம் ரசிகர்களாக மாறிய மாயாஜாலத்தை இந்தப்படம் நிகழ்த்தி காட்டியது 'புலி முருகன்'. புலியின் மேல் மனிதனுக்கு உண்டான தீராப்பகையை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வைசாக். சுமார் 35 கோடியில் தயாரான இந்தப்படம் மொத்தமாக 15௦ கோடிக்கு மேல் வசூலித்து பிரமிப்பை ஏற்படுத்தியது.
பீட்டர் ஹெய்னின் கை வண்ணத்தில் சண்டைக்காட்சிகள், குறிப்பாக மோகன்லால் புலியுடன் மோதும் காட்சிகளும், க்ளைமாக்ஸில் இருபது நிமிட தொடர் சண்டைக்காட்சியும் தியேட்டர்களுக்கு ரசிகர்களை திரும்ப திரும்ப வரவைத்தன. ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல் மோகன்லாலுக்கு லைப் டைம் ரெக்கார்டாக அமைந்துவிட்டது இந்த 'புலி முருகன்'.