'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'வில்லன்' படம் இந்த மாதம் ரிலீசாகவுள்ளது. அதை தொடர்ந்து தற்போது தான் நடித்து வரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் மோகன்லால். விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம் பிளாக் மேஜிக் பின்னணியில் உருவாகி வருகிறது. இந்த ஸ்ரீகுமார் மேனன் பல விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டிருந்தாலும் சினிமாவை பொறுத்தவரை ஒரு அறிமுக இயக்குனர் தான்.
இந்தநிலையில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மோகன்லாலே வெளியிட்டுள்ளார். ஆச்சர்யமாக இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஒரு அறிமுக இயக்குனருக்கே கொடுத்துள்ளார் மோகன்லால். அஜய் வர்மா என்பவர் இயக்கம் இந்த படத்துக்கு சஜூ தாமஸ் என்பவர் கதை எழுதியுள்ளார், இன்னொரு ஆச்சர்யமாக இந்தப்படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்காமல், மூன்ஷாட் என்டர்டெய்ன்மென்ட் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கிறது..
மோகன்லாலின் புதிய படத்தை சில முன்னணி இயக்குனர்கள் இயக்குவார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில், எந்தவித க்ளூவுமே இதுவரை கசியவிடாமல், ஒரு அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பளித்துள்ளது மோகன்லால் ரசிகர்களிடையேயும் திரையுலகத்தினரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.