ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்த 2017 வரலட்சுமி வருடம் என சொல்லும் அளவுக்கு அவரிடன் படங்கள் வரிசைகட்டி கொண்டு வெளியாகின்றன. இன்னும் வெளியாக இருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் வரலட்சுமி நடித்த விக்ரம் வேதா, நிபுணன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சிபிராஜூடன் இணைந்து நடித்துள்ள 'சத்யா' படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தநிலையில் மலையாளத்தில் வரலட்சுமி நடித்துள்ள 'காட்டு' (காற்று) படம் வரும் அக்-5ல் ரிலீசாக இருக்கிறது.
கடந்த வருடம் 'கசபா' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் கால் பதித்தார் நடிகை வரலட்சுமி.. அதையடுத்து தற்போது மம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வரலட்சுமி. அதற்கும் முன்பே 'காட்டு' (காற்று) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படத்தை அருண்குமார் அரவிந்த் என்பவர் இயக்குகிறார். நடிகரும் காதாசிரியருமான முரளிகோபி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்தப்படத்தில் முத்துலட்சுமி என்கிற தைரியமான தமிழ்ப்பெண் கேரக்டரில் நடித்துள்ளாராம் வரலட்சுமி..