ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ரிலீஸானது. இந்தப்படத்தில் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் இயக்கியிருந்தார். மோகன்லாலும் இவரும் பல வருடங்கள் கழித்து இணைந்து படம் பண்ணியதால் எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை லால் ஜோஸ் ஈடுகட்ட தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் அந்தப்படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு கேரளாவையும் தாண்டி மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதும், இந்தப்பாடலுக்காக ரசிகர்கள் கூட்டம் மீண்டும் தியேட்டருக்கு வருவதும் வருத்தத்தில் இருந்த இயக்குனர் லால் ஜோஸை உற்சாகப்படுத்தியுள்ளதாம். இந்தப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல், கடந்த வாரம் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடித்தது.
இந்தப்பாடல் கல்லூரி மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்வது போல படமாக்கப்பட்டிருந்தது. மோகன்லால் படத்தில் என்ட்ரி ஆவதற்கு முன்பே இந்தப்பாடல் படத்தில் வந்துவிடும்.. மோகன்லால் என்ட்ரியை எதிர்பார்த்து படம் பார்க்கும் ரசிகர்களை அப்போது இந்தப்படால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், படம்விட்டு வெளியே வந்ததும் மனதில் அடிக்கடி நினைத்து முணுமுணுக்கும் பாடலாக அமைந்து விட்டது ஆச்சர்யமே. இதுவரை இந்த பாடலை யூடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமான நபர்கள் பார்த்துள்ளனராம்.