விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
இந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன், இனிமேல் தான் ஹீரோவாக நடித்தால் சரியாக இருக்காது என்று தனக்கு தோன்றியதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். அந்தவகையில, தனுசுடன் ஷமிதாப் படத்தில் நடித்தது போன்ற இந்தி சினிமாவில் பிரபல இளவட்ட ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவரும் அமிதாப்பச்சன, பல படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், சிரஞ்சீவியின் 151வது படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் அமிதாப்பச்சன். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராவதால், முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறார் அமிதாப்பச்சன். அந்த வகையில், சுதந்திர போராட்ட கதையில் தயாராகும் இந்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு பழம்பெரும் சுதந்திர போராட்ட தியாகியாக நடிக்கும் அமிதாப்பச்சன், இளவட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் குருவாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டும் வேடத்தில் நடிக்கிறாராம். ஆக, இந்த படத்தில் சுதந்திர போராட்ட வீரராக நடிக்கும் சிரஞ்சீவிக்கு குருவாக நடிக்கிறாராம் அமிதாப்பச்சன்.