ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பொதுவாக சினிமா பிரபலங்களுக்கு குழந்தை பிறந்தால், அதன் புகைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.. மீடியாக்களும் யார் அந்த குழந்தையின் புகைப்படத்தை முதலில் வெளியிடுவது என பரபரப்பு காட்டுவார்கள்.. அந்தவகையில் கடந்த மே மாதம் பிறந்த துல்கர் சல்மானின் பெண் குழந்தையின் புகைப்படமும் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் துல்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்களது குழந்தையுடன் துல்கர் சல்மானும் அவரது மனைவி அமல் சுபியாவும் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்தப்புகைப்படத்தை துல்கரின் மனைவி அமல் சுபியா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மானுக்கும் சென்னையை சேர்ந்த வட இந்திய முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த அமல் சுபியாவுக்கும் 2௦11 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. சுமார் ஐந்து வருடம் கழித்து, கடந்த மே-5ல் துல்கர்-அமல் சுபியா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என பெயர் வைத்துள்ளார் துல்கர் சல்மான்.