ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரொமான்ஸ் கதைகளில் நடித்து வந்தவர் நாகசைதன்யா. நடிகை சமந்தாவின் வருங்கால கணவரான இவர், தற்போது யுத்தம் சரணம் என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் கிருஷ்ண மாரிமுத்து இயக்கும் இந்த படத்தில் லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார்.
மேலும், இதற்கு முன்பு ராரண்டாய் வேதுக சுதன் என்ற படத்தில் ராகுல் பிரித் சிங்குடன் இணைந்து நடித்து வந்த நாகசைதன்யா அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்த படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். அதோடு, இந்த யுத்தம் சரணம் படத்தின் டைட்டீல், பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு நாக சைதன்யா ஆக்சன் அவதாரம் எடுத்திருப்பதை தெரிவித்தனர். அதையடுத்து வருகிற ஜூலை 31ந்தேதி அன்று யுத்தம் சரணம் படத்தின் டீசர் வெளியாகயிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.