ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
கடந்த ஒரு வாரத்திற்கு முன் மலையாளத்தில் வெளியான சண்டே ஹாலிடே படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மவுத் டாக் பப்ளிசிட்டி இந்தப்படத்திற்கு கூட்டத்தை வரவழைக்க ரொம்பவே உதவியுள்ளது. அதனால் தான் கடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் ஐந்து கோடி ரூபாயை இந்தப்படம் வசூலித்துள்ளது. இது இளம் நாயகர்களில் இரண்டாம் நிலை நாயகனாக இருக்கும் ஆசிப் அலியின் முந்தைய பட வசூல்களை ஒப்பிட்டு பார்த்தால் உண்மையிலேயே மிகப்பெரிய தொகைதான்.
அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள 'மகேஷிண்டே பிரதிகாரம்' நாயகி அபர்ணா பாலமுரளிக்கும் ராசியான நாயகி என்கிற முத்திரையை அழுத்தமாக குத்தியுள்ளது. இந்தநிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்து வரும் 'திருச்சிவப்பேரூர் கிளிப்தம்' படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த நட்சத்திர ஜோடியும் தங்களது முந்தைய படம் போலவே இந்தப்படமும் வெற்றிபெரும் என நம்புகின்றனராம். இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடிக்கிறார்.