சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் 'ஷட்டர்'. மலையாள இயக்குனர் ஜாய் மேத்யூ இந்தப்படத்தை இயக்கிருந்தார். தமிழில் கூட இந்தப்படம் ரீமேக்கானது. ஆனால் இப்படி ஒரு ஹிட்டை கொடுத்த பின்னர், அடுத்ததாக படம் எதுவும் இயக்காமல், கதையும் எழுதாமல் மிகவும் பிசியான குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார் ஜாய் மேத்யூ. மம்முட்டியுடன் தொடர்ந்து நான்கைந்து படங்களில் நடித்துவிட்ட ஜாய் மேத்யூ, தற்போது மம்முட்டி நடிக்கவுள்ள 'அங்கிள்' என்கிற படத்துக்காக கதை எழுதியுள்ளார்.
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இளம் மாணவிக்கும் அவரது தந்தையின் நண்பரும் இந்த இளம்பெண் அங்கிள் என பாசமாக அழைப்பவருக்குமான நட்பை, பாசத்தை மையமாக வைத்து, அதேசமயம் தான் சந்தித்த உண்மை சம்பவத்தின் பின்னணியையும் சேர்த்து இந்த கதையை எழுதியுள்ளாராம். இந்த 'அங்கிள்' கேரக்டரில் தான் மம்முட்டி நடிக்கிறாராம். தற்போது இந்த இளம்பெண் கேரக்டரில் நடிப்பதற்கு 15லிருந்து 17வயது வரை உள்ள இளம்பெண் தேவை என விளம்பரம் கொடுத்திருக்கிறார் ஜாய் மேத்யூ. இந்தப்படத்திற்கு கதை எழுதுவது மட்டும் தான் ஜாய் மேத்யூவாம். படத்தை கிரீஸ் தாமோதர் என்பவர் இயக்க உள்ளாராம்.