ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகளுக்கு அப்படி என்னதான் அதில் இன்பம் கிடைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக சினிமா பிரபலங்களை குறிவைத்து தான் இந்த வதந்திகள் பரவுகின்றன. இதற்கு தமிழ், மலையாளம் என எந்த திரையுலகமும் தப்பவில்லை.. இப்போது லேட்டஸ்டாக இந்த மரண வதந்தியில் சிக்கியவர் மலையாள நடிகரான விஜயராகவன்..
மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பிஸியாக நடித்துவரும் விஜயராகவன், 'பைரவா' படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழி அபர்ணா வினோத்தின் தந்தையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. சமீபத்தில் விஜயராகவன் உடல் ஆம்புலன்ஸில் செல்வது போல ஒரு படம் வெளியானது. அந்த புகைப்படம் அவர் தற்போது திலீப்புடன் நடித்துவரும் 'ராம்லீலா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் எடுக்கப்பட்டது..
ஆனால் அதை உண்மையென நினைத்தோ அல்லது நிஜம் போல சித்தரித்தோ சோஷியல் மீடியாவில் யாரோ ஒருவர் கண்ணீர் அஞ்சலியுடன் வதந்தியாக பரப்ப, அதன் உண்மைத்தனையை கூட அறிந்துகொள்ளாமல் பலரும் அதை ஷேர் செய்துள்ளனர். தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என மிகுந்த வேதனையுடன், வதந்தி குறித்து விசாரிப்பவர்களுக்கு விளக்கம் அளித்துவருகிறார் விஜயராகவன்.. மேலும் இந்த வதந்தியை உருவாக்கியவர்கள் மற்றும் இதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையினரிடம் புகாரும் அளித்துள்ளார் விஜயராகவன்.