ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து, பின் வில்லனாக மாறி, கடந்த பத்தாண்டுகளில் கால ஓட்டத்தில் குணச்சித்திர நடிகராக பட்டை தீட்டப்பட்டவர் தான் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன்.. தற்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவரும் மனோஜ் கே.ஜெயன். தேசிய விருது பெற்ற 'களியச்சன்' போன்ற சிறு பட்ஜெட் படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.. அதனால் அப்படிப்பட்ட படங்களில் மனோஜ் கே.ஜெயனை கதாநாயகனாக நடிக்க வைக்க புதுப்புது இயக்குனர்கள் அவரை தேடி வருகிறார்களாம்.
ஆனாலும் அப்படிப்பட்ட இயக்குனர்கள் தன்னை ஹீரோவாக வைத்து கதை சொல்லும்போது அந்தக்கதையில் ஹீரோவுக்கு இணையாக வேறொரு முக்கியமான கேரக்டர் இருந்தால், கதை சொன்ன இயக்குனரிடம் ஹீரோவுக்கு பதிலாக தனக்கு அந்த கேரக்டர் ரோலை தரமுடியுமா என கேட்டு அதிர்ச்சியடைய வைக்கிறாராம். “சார் நீங்க ஹீரோ.. நீங்க போய் அந்த கேரக்டரில் எப்படி..?” என பல இயக்குனர்கள் சொல்லிவிடுகிறார்களாம். அதனால் அவர்கள் தன்னை எந்த கேரக்டரில் நினைத்து தேடிவந்தார்களோ அதையே கொடுக்கட்டும் என அமைதியாக ஒப்புக்கொண்டு விடுகிறாராம் மனோஜ் கே.ஜெயன்..